சீனாவின் அச்சுறுத்தலுக்கு அஞ்சமாட்டோம் என்று தைவான் நாட்டு அதிபர் சாய் இங் வெண் அறிவித்துள்ளார்.
தைவானை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் சீனா தன் ராணுவ படைகளின் நடவடிக்கைகளை பலப்படுத்தி வருகிறது. இந்நிலையில் இரண்டாம் முறையாக அதிபராக உள்ள சாய் இங் வெண் சீனாவின் மிரட்டலுக்கு நாங்கள் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என தெரிவித்துள்ளார்
இதையடுத்து 80 ஆயிரத்துக்கும் மேலான நாட்டு ராணுவ வீரர்கள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு அந்நாட்டின் தைச்சுங்க கடற்கரையில் நடந்த ராணுவ ஒத்திகையில் எப்-16 ரக போர் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டது. பீரங்கி இலக்குகள் மீது குண்டு மழை பொழியும் பயிற்சியிலும் அந்த ராணுவம் ஈடுபட்டது.