ஆளும் கட்சியில் நேபாள பிரதமருக்கு கடும் எதிர்ப்பு எழுந்து உள்ளது அதனால் இன்று மாலை ராஜினாமா செய்வார் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் 5 மாநிலங்களான சிக்கிம்,மேற்கு வங்காளம்,பீகார், உத்திரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 1,850 கி.மீ. எல்லையை நேபாளம் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்தியா நேபாளத்தின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக உள்ளது. தற்போது, நேபாளத்தைச் சேர்ந்த சுமார் 32,000 கோர்கா வீரர்கள் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்த நிலையில் இரு நாடுகளும் எல்லையைத் தாண்டி மக்களை சுதந்திரமாக கொண்டு செல்ல நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே நட்புறவு தொடர்ந்தாலும்,சில எல்லை பிரச்சினை நிலவி வருகின்றன.
லிபுலேக், காலாபனி, லிம்பியதுரா போன்ற உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் பகுதிகளை நேபாளம் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக நீடித்து வரும் பிரச்சனை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவை பொருட்படுத்தாமல் லிபுலேக், காலாபானி, லிம்பியதுரா பகுதிகளை நேபாளத்துடன் இணைத்து புதிய வரைபடத்தை வெளியிட்டுள்ளது.இதை தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக நேபாள பிரதமர் பேசி வந்த நிலையில் இந்தியா தங்களது ஆட்சியை முடக்க முயல்வதாகவும் கேபி சர்மா ஒலி குற்றஞ்சாட்டியுள்ளார்.
காட்மாண்டுவில் ஹோட்டல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், தனது ஆட்சியை கவிழ்க்க ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறுவதாகவும் அவர் கூறியுள்ளார். இதன் மூலம் நேபாளத்தில் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது .மேலும் சொந்த கட்சிக்குள் பிரதமர் கே.பி.சர்மா ஒலிக்கு எதிராகவும் குரல் எழுந்துள்ளது.இத்தகைய எதிரான சமீபத்திய கருத்துக்கள் இந்திய அரசியல் ரீதியாக சரியானவை அல்ல, இராஜதந்திர ரீதியில் பொருத்தமானவையும் அல்ல என்று ஆளும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் உணர்ந்ததால், உயர் என்சிபி தலைவர்கள் பிரதமர் ஒலியை ஜூன் 30 அன்று பதவி விலக வேண்டும் என்று கோரியுள்ளனர்.
இதற்கிடையில்,இன்று ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியமான நிலைக்குழு கூட்டம் நடைபெறுகிறது, அங்கே கே.பி. ஒலியின் நிலைமை தீர்மானிக்கப்படும்.நேபாள பிரதமர் கே.பி. ஒலி, ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் (என்சிபி) வளர்ந்து வரும் விரிசல்களுக்கு மத்தியில், இன்று ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .மேலும் அவர் நாட்டு மக்களுக்கு இன்று மாலை 4 மணிக்கு உரையாற்ற வாய்ப்புள்ளது.