Categories
தேசிய செய்திகள்

சீனாவை நோக்கி பீரங்கிகள்…. காலரை தூக்கி விடும் இந்தியா….!!

எல்லைப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த இந்திய ராணுவம் பீரங்கிகளை நிறுத்தி வைத்துள்ளது.

இந்தியாவின் எல்லைப் பகுதியான லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தின் அத்துமீறிய நடவடிக்கையால் இரு நாடுகள் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. எனவே இரண்டு நாடுகளும் அவர்களது எல்லையில் ராணுவ வீரர்களை நிறுத்தி வைத்தனர். கடந்த மே மாதத்தில் இருந்து இந்த பதட்டமான சூழல் நிலவி வருகிறது.  அதோடு பங்கோங் ஏரியின் தெற்கு மற்றும் வடக்கு கரைப் பகுதிகளில் பதற்றம் சற்று அதிகமாகவே இருந்து வருகின்றது.

இதனால் இந்தியா எல்லை பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியதோடு ஆயுதங்களையும் படைவீரர்களையும் குவித்துள்ளது. ஒருபுறம் வீரர்களைக் குவித்து வந்தாலும் இரு நாடுகளிடையேயான அமைதி பேச்சுவார்த்தையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்டு ராணுவ கமாண்டர்களும் அவ்வப்போது சந்தித்து எல்லையில் இருக்கும் பதற்றத்தைத் தணிப்பதற்காக பேச்சுவார்த்தையே மேற்கொண்டு வருகின்றனர்.

நிலவிவரும் பதற்றமான சூழ்நிலையில் எல்லை பகுதியான லடாக் கிழக்கு பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த இந்திய ராணுவம் பீரங்கிகளையும் டாங்கிகளையும் நிறுத்தியுள்ளது. அதோடு எல்லையை ஒட்டி முகாம் அமைக்கும் பணி போன்றவற்றில் இந்திய வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |