5 ஜி சோதனையில் சீன நிறுவனங்களை அனுமதிக்க வேண்டாம் என்று இந்தியா முடிவெடுத்ததற்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது.
5 ஜி சோதனையில் சீன டெலிகாம் நிறுவனங்களை அனுமதிக்கவேண்டாம் என இந்தியா முடிவெடுத்துள்ளது. இந்தியாவின் இந்த முடிவை அமெரிக்காவின் முக்கிய எம்பிக்கள் பாராட்டி உள்ளனர். 5ஜி சோதனைக்கு ரிலையன்ஸ், ஏர்டெல், வோடபோன் மற்றும் எம்டிஎன்எல்லுக்கு மட்டுமே மத்திய அரசு அனுதி அளித்துள்ளது. ஆனால் அவர்கள் யாரும் சீன நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை பயன்படுத்த கூடாது எனவும் இந்திய அரசு நிபந்தனை விதித்துள்ளது. இந்த முடிவை அமெரிக்க நாடாளுமன்ற வெளியுறவு விவகார நிலைக்குழுவின் தலைவரும் குடியரசு கட்சியின் எம்பியுமான மைக்கேல் மேக்கவுல் பாராட்டி உள்ளார்.