Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சீனாவை மட்டுமே நம்பியிருப்பது நாட்டுக்கு ஆபத்து – நீதிபதி வேதனை

மருந்துகளின் மூலப் பொருள்களுக்கு அண்டைய நாடான சீனாவை மட்டுமே நம்பி இருப்பது நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்தானது என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

புற்றுநோய்க்கு மருந்து தயாரிக்க ஒத்துழைப்பு வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி வின்கேம் ஆய்வகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. புதிய மருந்துகள் கண்டுபிடிக்க அரசு முறையாக ஒத்துழைப்பு அளிப்பதில்லை என மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் மனுதாரர் நிறுவனத்திற்கு நிதி உதவி உள்ளிட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்று முடிவெடுக்க மத்திய அரசின் நிதித்துறை மற்றும் மருந்து துறையின் இணைச் செயலாளர்கள் தலைமையில் குழு அமைக்க உத்தரவு பிறப்பித்தார்.

மருத்துவத்துறை ஆராய்ச்சிகளுக்கு அரசின் ஆதரவு இல்லாததால் திறமை வாய்ந்த பலரை நாம் ஏற்கனவே இழந்துவிட்டதாக வேதனை தெரிவித்த நீதிபதி, ஆராய்ச்சிகளுக்கு ஆதரவளித்து மனுதாரர் போல நாட்டிலுள்ள ஆராய்ச்சியாளர்களை தக்கவைத்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். உலக அளவில் மருந்துகள் தயாரிப்பில் முன்னோடியாக இருந்த இந்தியா 90 சதவிகிதம் மருத்துவம் மூலம் பொருட்களுக்கு சீனாவை மட்டுமே நம்பி உள்ளதால் தரம் குறைந்த மருந்துகளும் விற்பனைக்கு வருவதாக தெரிவித்தார். இறக்குமதிக்கு ஒரு நாட்டை மட்டும் சார்ந்திருப்பது தேசத்தின் பாதுகாப்புக்கு ஆபத்து என்றும் சுட்டிக்காட்டினார்.

Categories

Tech |