Categories
உலக செய்திகள்

சீனாவை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா…!!!! ஷாங்காய் நகரில் வசிக்கும் 2.60 கோடி மக்களுக்கு கோவிட் பரிசோதனை…!!

சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா தொற்று வேகம் எடுத்து வரும் நிலையில் அங்கு வசிக்கும் 2 கோடியே 60 லட்சம் மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய சீனா அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. சீனாவில் நேற்றைய நிலவரப்படி சுமார் 9 ஆயிரம் பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு சீன அரசாங்கம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ மருத்துவர்கள் மற்றும் ராணுவ படையினரை ஷாங்காய் நகருக்கு அனுப்பி அங்குள்ள மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் படி சீன அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

Categories

Tech |