இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு ஆண்டில் மிகவும் வலுவான நிலையில் 8.2% ஆக இருக்கும் என பன்னாட்டு நிதியம் கூறியுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நடப்பு ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகவும் வலுவான வகையில் இருக்கும். உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா இருக்கும். சீனாவின் வளர்ச்சியான 4.4 சதவீதத்தை விட இரண்டு மடங்கு வேகமானது ஆக இந்தியா இருக்கும். உலகின் பொருளாதார வளர்ச்சியும் நடப்பு ஆண்டில் அதிகமாக இருக்கும்.
உக்ரேனில் நடக்கும் போரில் பிரதிபலிப்பு காரணமாக அடுத்த ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி குறைந்து கணிக்கப்பட்டுள்ளது. போர் காரணமாக எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலையில் பாதிப்பு ஏற்பட்டு அது வளர்ச்சியை பாதிக்கும். சீனாவில் கடந்த ஆண்டு வளர்ச்சியை 8.1 சதவீதமாக இருந்தது. ஆனால் நடப்பு ஆண்டில் வளர்ச்சி 4.4 சதவீதமாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு 5.1 சதவீதமாக இருக்கும். இந்தியாவின் வளர்ச்சியில் பாதையே இருக்கும் சீனாவின் வளர்ச்சி. சீனாவில் அடிக்கடி கொரோனாவுக்காக அமல் படுத்தப்படும் தடைகள் அதன் வளர்ச்சியை பாதிப்பதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.