Categories
உலக செய்திகள்

சீனாவை வெறுப்பேற்ற!…. தைவானுக்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்க ஆளுநர்….!!!!

தைவான் மீது சீனா கோபத்துடன் உள்ள நிலையில், அந்நாட்டிற்கு அமெரிக்க ஆளுநர் சென்று இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சீனாவின் கடுமையான எதிர்ப்பை மீறி அமெரிக்கா சபாநாயகர் பெலோசி தைவான் சென்றார். இதை கண்டித்து தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தி மேற்கொண்டு போர் பயிற்சியில் ஈடுபட்டது. இதன் காரணமாக தைவான் மற்றும் சீனா எல்லையில் பதற்றமான சூழ்நிலை இருந்தது. அதன்பின் அண்மையில் அமெரிக்க பிரதிநிதிகள் குழு தைவான் சென்றுவந்தது. இந்த நிலையில் சீனாவை மேலும் வெறுப்பேற்ற அமெரிக்காவின் இண்டியானா மாகாண ஆளுநர் எரிக்ஹோல்காம்ப், 4 நாள் பயணமாக தைவானுக்கு நேற்று முன்தினம் வந்தார்.

அவர் தைவான் அதிபரான சாய் இங்-வெனை சந்தித்து பேசினார். அப்போது, பொருளாதார பரிமாற்றங்கள் மற்றும் செமிகண்டக்டர்கள் தொடர்பாக இருதலைவர்களும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். முன்பே அமெரிக்க, சீனா இடையில் மோதல் நிலவு வரும் நிலையில் ஆளுநர் சந்திப்பு மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் ஜப்பான் எம்.பி.க்கள் கெய்ஜிபுருயா மற்றும் மினோரு கிஹாரா போன்றோர் நேற்று தைவானுக்கு வந்துள்ளனர். அவர்கள் இன்று தைவான் அதிபர் சாய்இங்-வெனை சந்தித்து பேச இருக்கின்றனர்.

Categories

Tech |