பல சமூக விரோத செயல்களில் ஈடுபடும் சீனாவிற்கு பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நடத்த தகுதியில்லை என்று 8 ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் திபெத் மக்கள் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்கி 20 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்நிலையில் சீனாவிற்கு குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நடத்த தகுதியில்லை என்று 8 ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் திபெத் மக்கள் ஒன்றிணைந்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
மேலும் இவர்கள் சீனாவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியும், கைகளில் பதாகைகளையும் பிடித்துக் கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அதுமட்டுமின்றி சீனா உயிக்கர் உட்பட பல இன மக்களுக்கு எதிராக சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதால் அந்நாடு குளிர்கால போட்டியை நடத்துவதற்கு அனுமதி வழங்கிய சர்வதேச ஒலிம்பிக் அமைப்பை கண்டித்தும் திபெத்திய மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளார்கள்.