Categories
உலக செய்திகள்

சீனா-அமெரிக்கா இடையில் வர்த்தகம் பாதிப்பு…. ஜோ பைடன் எடுத்த முடிவு….!!!!

தைவான் பிரச்சனை மற்றும் பரஸ்பர வர்த்தகம் குறித்து அமெரிக்கா, சீனா இடையில் பிணக்கம் நிலவி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன், சீன அதிபரான ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு இருக்கிறார். பருவ நிலை மாற்றம் குறித்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் கலந்துகொண்டார். இந்நிலையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ஜோபைடன், அடுத்த 10 தினங்களுக்குள் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் தொலைபேசி வழியே பேச உள்ளதாக கூறினார். சென்ற மார்ச்மாதம் நடந்த மேனியர் உச்சிமாநாட்டிற்கு பின் அமெரிக்கா, சீனா நாடுகளின் தலைவர்கள் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பொலோசி சமீபத்திய தைவான் பயணத்துக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இச்சந்திப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் நான்சி பொலோசியின் தைவான் பயணம் தேவை இல்லாத ஒன்று என அமெரிக்க உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாக குறிப்பிட்ட பைடன் பொலோசியின் பயணத்தால் மாற்றம் ஏதும் ஏற்படபோவதில்லை என தெரிவித்தார்.

பொலோசியின் தைவான் பயணம் முன்பே ஏப்ரலில் திட்டமிடப்பட்டு உள்ளதாகவும், அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து பயணம் தள்ளிவைக்கப்பட்டதாகவும் பைடன் குறிப்பிட்டார். தைவானை கைப்பற்ற சீனா ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எடுத்தால் அவற்றில் அமெரிக்கா தலையிடும் என சென்ற மேமாதம் பைடன் தெரிவித்ததிலிருந்தே அமெரிக்காவுடன் சீனா மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. இதன் காரணமாக இருநாடுகளிடையே வர்த்தகம் பாதிக்கப்பட்டு இருக்கும் சூழ்நிலையில், 10 தினங்களுக்குள் சீனஅதிபர் ஜி ஜின்பிங்குடன், பைடன் பேச இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |