ஜோ பைடன் ஜனாதிபதியாக இருக்கும் வரை சீனா அமெரிக்காவை விட சக்தி வாய்ந்த நாடாக ஆக முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதில் உலகின் மிக சக்திவாய்ந்த நாடாக சீனா மாறுவதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளையும் தடுப்பேன் என்று கூறியுள்ளார் .மேலும் ஜோ பைடன் அமெரிக்க முன்னாள் அதிபரான பாரக் ஒபாமாவின் கீழ் துணை ஜனாதிபதியாக வேலை பார்த்தபோது சீன ஜனாதிபதியான சி ஜின்பிங் உடன் பேசியதாக கூறியுள்ளார் .
மேலும் சி ஜனநாயகத்தை விரும்புவதில்லை என்றும் அவர் ரஷ்ய அதிபர் புதினை பின்பற்றுவதாகவும் கூறியுள்ளார். ஜோ பைடன் கூறுகையில் இது ஒரு நியாயமான போட்டி மோதலை அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை என்றும் சி ஜின்பிங்கிற்கு தெளிவுபடுத்தியதாகவும் சர்வதேச விதிகளை சீனா பின்பற்ற வேண்டும் என்றும் பைடன் கூறியுள்ளார்.