சீனாவில் இருந்து டெல்லிக்கு வருகின்ற நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 4 விமானங்களை ஏர் இந்தியா இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போதுள்ள காலகட்டத்தில் பன்னாட்டு விமான சேவைகள் இந்தியாவின் வந்தே பாரத் என்ற திட்டத்தின் கீழ் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. அவ்வகையில் சீனாவில் பீஜிங்கில் இருந்து டெல்லிக்கு வருகின்ற நவம்பர் 13, 20, 27 மற்றும் டிசம்பர் நான்காம் தேதி என நான்கு விமானங்களை இந்தியா இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளது.
அந்த தகவலை சீனாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்திருக்கிறது. இதனைப் போலவே டெல்லியில் இருந்து சீனாவின் மத்திய நகரமாக உள்ள உகான் நகருக்கு வருகின்ற ஆறாம் தேதி முதல் ஒரு விமானத்தை இயக்குவதற்கு இந்தியா தயாராகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.