சீனா எழுதப்பட்ட உறுதிமொழிகளை மீறியதால்தான் கிழக்கு லடாக்கில் எல்லை பதற்றம் தொடங்கியது என்று மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நேற்று முன்தினம் ‘குவாட்’ என்னும் வெளியுறவுத்துறை மந்திரிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். மேலும் அவருடன் ஆண்டனி பிளிங்கன் (அமெரிக்கா), யோஷிமாசா ஹயாஷி (ஜப்பான்), மரிஸ் பெயின் (ஆஸ்திரேலியா) ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து ஆஸ்திரியாவின் வெளியுறவு துறை மந்திரி மரிஸ் பெயினுடன், ஜெய்சங்கர் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு இருவரும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஜெய்சங்கரிடம் இந்த கூட்டத்தில் கிழக்கு லடாக் எல்லையில் நடக்கும் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றதா என்று ஒரு பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் கூறியதாவது. “நாங்கள் இந்திய-சீன உறவுகள் குறித்து விவாதித்தோம். ஏனென்றால் எங்கள் அண்டை நாடுகளில் நடக்கும் விஷயங்கள் பற்றி ஒருவருக்கொருவர் தெரிந்து கொண்டதன் அங்கமாகும்.
மேலும் பசிபிக் பிராந்திய நாடுகள் மற்றும் பல நாடுகள் சட்டப்பூர்வ ஆர்வமாக இருக்கும் ஒரு விவகாரம். இந்தியாவின் அசல் எல்லை கட்டுப்பாடு கோட்டில் படைகளைக் குவிக்க வேண்டாம் என்ற ஒப்பந்தங்களை சீனா மீறி விட்டதால் தான் தற்போதைய நிலைமை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு புறக்கணிக்கிறபோது அது முழு சர்வதேச சமூகத்துக்கும் நியாயமான அக்கறையான பிரச்சினை ஆகிறது” என்று கூறினார்.
கிழக்கு லடாக்கில் கடந்த 2020ம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி அசல் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு இடத்தில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய படைகள் மீது சீனா தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்தியா பதிலடி கொடுத்தது அதில் பெரும்பாலான மக்கள் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இரு தரப்பிலும் தலா 50 ஆயிரம் இராணுவ வீரர்கள் ஒரு பக்கம் குவிக்கப்பட்டு மற்றொரு பக்கம் இருதரப்பு இராணுவ மட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்ந்திருந்தாலும் பதற்றமும் தொடர்கிறது.
மேலும் ஜெய்சங்கர் மெல்போர்னில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கனுடனும் ஆப்கானிஸ்தான் நிலவரம், இரு தரப்பு உறவுகள், கொரோனா நிலவரம், ரஷியா-உக்ரைன் நெருக்கடி, ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தினர்.
இது குறித்து அமெரிக்க வெளியுறவு பத்திரிகையாளர் நெட் பிரைஸ் கருத்து தெரிவிக்கையில், “குவாட் கூட்டத்தில் இரு தலைவர்களும் இந்திய பசிபிக் பகுதியில் ஒற்றுமை வலுப்படுத்துவது மற்றும் விரிவுபடுத்துவது பற்றி பேசினர்’’ என தெரிவித்தார்.