ஆசியாவில் வலுவான நாடக திகழ வேண்டும் என்று சீனா ஆதிக்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவுக்கு எதிரான போக்கை பாகிஸ்தான் தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. இந்தியாவினுள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தொடர்ந்து ஊக்குவிக்கிறது. இதற்கிடையில் சீனாவுக்கு பாகிஸ்தானுக்கு இடையில் நல்லுறவு நிலவி வருகிறது.
இந்நிலையில் சீன ராணுவத்தின் கப்பற்படை செய்தி தொடர்பாளர் லியு வென்ஷெங் கூறியது, “இந்த இரு நாடுகளின் கப்பற்படைகள் கிழக்கு சீனாவில் ஷாங்காய் அருகில் கூட்டு போர் பயிற்சி அடுத்த சில நாட்களில் நடத்தப்பட உள்ளது.அதுமட்டுமில்லாமல் இந்த பயிற்சி கப்பற்படை பாதுகாப்பு சவால்களை கூட்டாக சந்திப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இது உதவும். அதே நேரத்தில் அனைத்து வானிலை மூலோபாய கூட்டை மேம்படுத்தவும் செய்யும் என்று அவர் தெரிவித்தார். மேலும் இந்த கூட்டுப் போர் பயிற்சி வருடாந்திர திட்டத்தின் படி நடக்க உள்ளது என்றும் மூன்றாம் தரப்பினரை குறிவைத்து நடைபெறவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.