Categories
உலக செய்திகள்

“சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் பற்றி”…. வெளியுறவு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை….!!!!

பாகிஸ்தான் நாட்டில் சாலைகள், எரிசக்தி திட்டங்கள் மற்றும் தொழில் துறை மண்டலங்களை உருவாக்குவதன் வாயிலாக பாகிஸ்தான் மற்றும் சீனாவில் இணைப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் 2015-ல் தொடங்கப்பட்ட திட்டமே சீபெக் என்றழைக்கப்படும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் ஆகும். இந்நிலையில் சீபெக்கின் 3வது ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு குறித்து நடந்த கூட்டு செயற்குழுவின் இந்த கூட்டம் காணொலி மூலம் நடந்தது. பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர் சோஹைல் மஹ்மூத் மற்றும் சீனாவின் வெளியுறவுத் துறை துணைமந்திரி வு-ஜியாங்ஹாவ் போன்றோர் தலைமையில் இச்சந்திப்பு இடம் பெற்றதாக அந்நாட்டு வெளியுறவு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த கூட்டத்தில் 60பில்லியன் டாலருக்கும் கூடுதல் மதிப்பிலான சீனா மற்றும் பாகிஸ்தானின் பொருளாதார வழித்தடத்துக்கு புத்துயிரளித்தல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. சர்வதேச மற்றும் பிராந்திய இணைப்பை குறிப்பாக ஆப்கானிஸ்தானுக்கு வலுப்படுத்துவதில் “சீபெக்” சாதனை படைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. சீனா, பாகிஸ்தானின் பொருளாதார வழித்தடத்தில் இணைவதற்கு விருப்பப்படும் எந்த ஒரு சர்வதேச நாட்டையும் பொருளாதார கூட்டணியில் வரவேற்பதாக இரண்டு நாட்டு பிரதிநிதிகளும் தெரிவித்தனர்.

அத்துடன் அந்த இருநாட்டுக்கும் இடையில் வலுவான வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் எதிர்த்துப் போராடுவதற்கான கூட்டுமுயற்சியை உருவாக்க பிராந்திய நாடுகளுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் அழைப்பு விடுத்தனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியே சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் அமைக்கப்பட இருக்கிறது. இதனால் இந்தியாவானது சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. அதையும் மீறி இத்திட்டத்திற்கு முக்கியத்துவம் வழங்கி சீனா இயங்கி வருகிறது. இதற்கிடையே இந்த பேச்சுவார்த்தை முக்கியமாக பார்க்கப்படுகிறது.

Categories

Tech |