Categories
உலக செய்திகள்

சீனா: மீண்டும் தலைதூக்கும் கொரோனா…. 69 பேருக்கு தொற்று பாதிப்பு…. வெளியான தகவல்…..!!!!

சீனா தலை நகர் பீஜிங் மற்றும் அந்நாட்டின் தொழில் நகரமான ஷாங்காயில் சென்ற மார்ச் மாதத்தில் கொரோனா பரவல் திடீரென்று அதிகரித்தது. இதையடுத்து அந்த இருநகரங்களிலும் கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைபடுத்தப்பட்டன. அதன்பின் தொற்று பரவல் குறைந்ததை அடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் இருநகரங்களிலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது.

இந்நிலையில் சீனாவில் இப்போது மீண்டுமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக பீஜிங் மற்றும் ஷாங்காய்நகரங்களில் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. பீஜிங்கில் பிரபல மதுபான விடுதி வாயிலாகவும், ஷாங்காய் நகரில் அழகு நிலையம் ஒன்றின் மூலமும் கொரோனா பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இந்நிலையில் சீன நாட்டில் நேற்று புதியதாக 69நபர்களுக்கு கொரோனா பரவல் உறுதிசெய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் பீஜிங்கில் 29 நபர்களும், ஷாங்காயில் 11 பேரும் தொற்று பாதிப்புக்கு ஆளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Categories

Tech |