Categories
உலக செய்திகள்

சீனா முன் வைத்திருக்கும் அச்சுறுத்தல்…. இந்தியா-அமெரிக்கா உறவை வளர்க்க வேண்டும்…. ஜி-7 மாநாட்டிற்கு மோடியை அழைத்த அமெரிக்கா….!!

ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இந்தியாவின் வர்த்தக கவுன்சிலின் இந்தியா ஐடியா மாநாடு காணொளி காட்சி மூலமாக நடந்துள்ளது. அமெரிக்க-இந்தியா வர்த்தக கவுன்சில் மூலமாக நடத்தப்பட்ட இரண்டு நாள் மெய்நிகர் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டு தனது கருத்தைக் கூறினார். அத்தகைய உரையில் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவிற்கு முதலீடு செய்ய வர வேண்டும் என அழைப்பு கூறினார். பிறகு மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ அடுத்ததாக நடக்கவிருக்கும் ஜி-7 மாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்கா அழைப்பதாக கூறினார். இத்தகைய மாநாடு அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே நல்ல உறவை ஏற்படுத்த கூடிய புதிய யுகம் எனவும் தெரிவித்தார். அமெரிக்கா ப்ளூ டார்ட் நெட்வொர்க்கினை மேம்படுத்துவதற்காக இந்திய நாட்டுடன் சேர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதனால் வர்த்தகத்திற்கு இந்தியா தயாராக இருக்க வேண்டும் எனவும் கூறினார். இந்தியாவின் பாதுகாப்பிற்காக அமெரிக்கா எப்போதும் ஆதரவளிக்கவில்லை. சீனா கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்திருக்கும் அச்சுறுத்தல் அனைத்திற்கும் இடையில் இரு நாடுகளும் உறவுகளை வளர்ப்பது என்பது முக்கியமாக கருதப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சீன நிறுவனங்கள் மீது உள்ள நம்பகத் தன்மையினை குறைப்பதற்கு இந்தியாவினை பாம்பியோ வலியுறுத்தினார். சீனாவிடமிருந்து விலகி உலக அளவில் உள்ள வினியோக சங்கிலிகள் அனைத்தையும் ஈர்ப்பதற்கு இந்தியாவிற்கு நிறைய வாய்ப்பு இருக்கின்றதாக கூறினார். மேலும் 20 இந்திய ராணுவ வீரர்களின் உயிர் தியாகம் அமெரிக்காவிற்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது. இந்தோ பசுபிக் பகுதியில் இந்தியாவினை முக்கிய பங்காளியாக அழைத்ததாகவும், தங்களை போன்று உள்ள அனைத்து ஜனநாயக நாடுகளும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டியது முக்கியமாக உள்ளது எனவும் தனது கருத்துக்களை பாம்பியோ கூறியுள்ளார்.

Categories

Tech |