சீனியர் சிட்டிசன் களைப் பொறுத்தவரை அதிக அளவில் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். ஏனென்றால் ஃபிக்சட் டெபாசிட்டில் எந்த ரிஸ்க்கும் கிடையாது. நமது பணம் பாதுகாப்பாக இருக்கும். வட்டிக்கு ஏற்ப வருமானமும் கிடைக்கும். அது மட்டும் இல்லாமல் பல்வேறு வங்கிகள் சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதலாக சிறப்பு வட்டி வழங்குகின்றன. ஃபிக்சட் டெபாசிட் பொறுத்தவரை குறுகிய கால முதல் நீண்ட காலம் வரை விருப்பம்போல் முதலீடு செய்யலாம். அதனை தொடர்ந்து ஒரு ஆண்டு அல்லது இரண்டு ஆண்டு குறுகிய கால ஃபிக்சட் டெபாசிட்டுக்கு பெரும்பாலும் அதிக வட்டி கிடைக்காது. எனவே குறுகிய கால டெபாசிட்டுக்கு சில வங்கிகள் சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக வட்டி வழங்கப்படும்.
அதன்படி, ஒரு ஆண்டு ஃபிக்சட் டெபாசிட் ஆர்பிஎல் வங்கி – 6.75%, பந்தன் பேங்க் – 6.5%, டிசிபி பேங்க்- 6.5%, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் 6.5% மற்றும் இண்டஸ் இண்ட் வங்கி- 6.5% ஆகிய வங்கிகள் அதிக வட்டி வழக்குகின்றன. அதனை போல 2 ஆண்டு ஃபிக்சட் டெபாசிட்டுக்கு பந்தன் பேங்க்- 7%,, டிசிபி பேங்க் – 7% , இண்டஸ் இண்ட் வங்கி – 7%, ஆர்பிஎல் வங்கி- 7%, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் – 6.5% ஆகிய வங்கிகள் அதிக வட்டி வழங்குகின்றன.