ரெப்போ வட்டி விகிதத்தை 4.90% ஆக உயர்த்தி உள்ளதாக, கடந்த ஜூன் மாதம் 8-ஆம் தேதி, ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதையடுத்து, ஃபிக்சட் டெபாசிட் (Fixed Deposit) முதலீட்டாளர்களுக்கு, பெரும் மகிழ்ச்சியான செய்தியாகும். ஏனெனில், கிட்டத்தட்ட பெரும்பாலான வங்கிகள் அனைத்தும் ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்திவிட்டன.
இந்நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்று எச்டிஎஃப்சி பேங்க் (HDFC Bank). மேலும் இந்த வங்கி, ஒரே வாரத்தில், 2-முறை ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இவ்வாறு ஜூன் 15 முதல் எச்டிஎஃப்சி வங்கி, ஃபிக்சட் டெபாசிட் வட்டியை உயர்த்தியதை தொடர்ந்து, நேற்று (ஜூன் 17) முதல் எச்டிஎஃப்சி வங்கியின் ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதமும் 0.25% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த வட்டி உயர்வு ஃபிக்சட் டெபாசிட் முதலீட்டாளர்கள் மற்றும் சீனியர் சிட்டிசன்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு எச்டிஎஃப்சி வங்கியானது, பொது வாடிக்கையாளர்களை காட்டிலும், சீனியர் சிட்டிசன்களுக்கு அதை விட கூடுதலாக 0.50% வட்டியினை வழங்குகிறது.
அதன்படி பொது வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும் வட்டி விகிதம் கீழே கொடுப்பட்டுள்ளது.
7 முதல் 14 நாட்கள் – 2.75%
15 முதல் 29 நாட்கள் – 2.75%
30 முதல் 45 நாட்கள் – 3.25%
46 முதல் 60 நாட்கள் – 3.25%
61 முதல் 90 நாட்கள் – 3.25%
91 நாட்கள் முதல் 6 மாதம் – 3.75%
6 மாதம் முதல் 9 மாதம் – 4.65%
9 மாதம் முதல் 1 ஆண்டு – 4.65%
1 ஆண்டு – 5.35%
1 ஆண்டு முதல் 2 ஆண்டு – 5.35%
2 ஆண்டு – 3 ஆண்டு – 5.50%
3 ஆண்டு – 5 ஆண்டு – 5.70%
5 ஆண்டு – 10 ஆண்டு – 5.75%
7 முதல் 14 நாட்கள் – 3.25%
15 முதல் 29 நாட்கள் – 3.25%
30 முதல் 45 நாட்கள் – 3.75%
46 முதல் 60 நாட்கள் – 3.75%
61 முதல் 90 நாட்கள் – 3.75%
91 நாட்கள் முதல் 6 மாதம் – 4.25%
6 மாதம் முதல் 9 மாதம் – 5.15%
1 ஆண்டு – 5.85%
1 ஆண்டு முதல் 2 ஆண்டு – 5.85%
2 ஆண்டு முதல் 3 ஆண்டு – 6%
3 ஆண்டு முதல் 5 ஆண்டு – 6.20%
5 ஆண்டு முதல் 10 ஆண்டு – 6.50%