இன்றைய கால கட்டத்தில் பலருக்கும் வயதான காலத்தில் பாதுகாப்பான சேமிப்புடன் மாதம் மாதம் கனிசமான வருவாயும் கிடைக்க வேண்டும் என்பது தான் ஆசையாகும். அவர்களுக்கு நல்ல தீர்வாக போஸ்ட் ஆபீசில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், தேசிய ஓய்வூதிய திட்டம் போன்ற பல்வேறு சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் இருக்கிறது. முதியவர்களுக்கு மிகவும் பாதுகாப்பான திட்டமாக மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் இருக்கிறது. 60 வயதை எட்டிய இந்தியர்கள் இந்த திட்டத்தில் கணக்கு தொடங்கி முதலீடு செய்து கொள்ளலாம். போஸ்ட் ஆபீஸ் அல்லது வங்கியில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்தால் நல்ல நிலையான வருமானத்தினை பெறலாம்.
குறைந்த பட்சம் ஆயிரம் அதிகபட்சமாக 15 லட்சம் வரை முதலீடு செய்து கொள்ளலாம். இந்த திட்டத்திற்கு 7.4 சதவிகித வட்டி ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒருமுறை செலுத்தப்படுகின்றது. மேலும் இந்த சேமிப்பு திட்டம் முழு வரிக்கு உட்பட்டது. வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் நிலையான வைப்புத் தொகையை வழங்கி வருகின்றன. இந்த சேமிப்பு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நிதியாண்டில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வரை முதலீடு செய்து கொள்ளலாம். இந்த தொகையானது ஐந்து வருட வரி சேமிப்பு எப்டி இல் மொத்த வருவாயிலிருந்து விலக்கு பெற தகுதி பெறுகின்றது. மேலும் இதற்கான வட்டி தொகையை மாதந்தோறும் காலாண்டு அரையாண்டு என ஒட்டுமொத்தமாக பெற்றுக் கொள்ளலாம். இந்த வரிசையில் புத்தகத்தில் ஐந்து வருடங்கள் வரை டெபாசிட்களை திரும்ப பெற முடியாது. தேசிய சேமிப்பு சான்றிதழ் என்பது ஒரு நிலையான வருமான முதலீடு திட்டமாகும். இந்த திட்டத்தை ஒருவர் எந்த ஒரு வங்கியிலோ அல்லது தபால் நிலையங்களிலோ எளிதாக தெரிந்து கொள்ளலாம். இது ஒரு சேமிப்பு பத்திரத் திட்டம் இதன் முதன்மை நோக்கம் என்பது சிறிய மற்றும் நடுத்தர வருவாய் முதலீட்டாளர்களை முதலீடு செய்ய வைப்பது தான்.
இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு அதிகபட்ச வயது வரம்பு எதுவும் இல்லை. ஆனால் பிரிவு 80 சிஎன் கீழ் வரிச்சலுகை ஒரு நிதியாண்டிற்கு ரூ. 1.5 லட்சம் வரை மட்டுமே செலுத்த முடியும். அதிலும் குறிப்பாக தேசிய சேமிப்பு சான்றிதழ் மூலமாக கிடைக்கும் பணத்திற்கு டிடிஎஸ் இல்லாததால் தனது வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும்போது அதற்கு பொருந்தும் வரியே செலுத்த வேண்டும். தேசிய ஓய்வூதிய அமைப்பின் குடிமக்களின் ஓய்வு காலத்தை சிறப்பான முறையில் வழிநடத்த சில வசதிகளை செய்து வருகின்றது. இது வரி சலுகைகளை வழங்குவது மட்டுமல்லாமல் ஓய்வூதியம் மூலதன குவிப்பு காலப்போக்கில் ஓய்வதில்லை. மேலும் தேசிய ஓய்வூதிய அமைப்பில் செயல்படும் பங்களிப்பு பிரிவு பிரிவு 80 CCD (1) இன் கீழ் ஒரு நிதியாண்டில் ரூ. 1.5 லட்சம் வரையிலான விலக்கு பெறுவதற்கு தகுதி பெறுவது மட்டுமல்லாமல், பிரிவு 80CCD(1B) இன் கீழ் ஒரு நிதியாண்டில் ரூ. 50,000 வரை கூடுதல் வரி சலுகையும் கிடைக்கும்.