தபால் நிலையங்களில் மூத்த குடிமக்கள் தொடங்கும் திட்டங்களுக்கான பலன்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம்.
இந்தியாவில் பெரும்பாலானோர் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும் என்றால் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களையும் பெரும்பாலும் விரும்புகின்றனர். இதன் காரணமாக தபால் நிலையங்களில் பல்வேறு விதமான சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் சீனியர் சிட்டிசன்களுக்காக மூத்த குடிமக்கள் திட்டம், தேசிய ஓய்வூதிய திட்டம் போன்றவைகள் நடைமுறையில் இருக்கிறது. இந்த திட்டங்களில் இணைவோருக்கு வரி சலுகைகளும் வழங்கப் படுவதால் பெரும்பாலான மக்கள் தபால் நிலையங்களில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் 5 வருடங்களுக்கான சீனியர் சிட்டிசன்களுக்கான மூத்த குடிமக்கள் திட்டத்தில், 60 வயது பூர்த்தி அடைந்தவர்கள் 1,000 ரூபாய் செலுத்தி திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் அதிகபட்சமாக ரூபாய் 15 லட்சம் வரை முதலீடு செய்து கொள்ளலாம். இதனையடுத்து தேசிய சேமிப்பு திட்டத்தில் வங்கி மூலமாகவோ அல்லது தபால் நிலையங்கள் மூலமாகவோ சேர்ந்து கொள்ளலாம்.
இந்தத் திட்டத்தில் இணைவதற்கு அதிகபட்ச வயது வரம்பு எதுவும் கிடையாது. இந்த தேசிய ஓய்வூதிய திட்டத்தில் பலவிதமான சலுகைகள் சீனியர் சிட்டிசன்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அதிக அளவில் வட்டி கிடைப்பதோடு, வரி சலுகையும் வழங்கப்படுகிறது. மேலும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் ரூபாய் 1.5 லட்சம் வரை முதலீடு செய்தால் 50 ஆயிரம் ரூபாய் வரை வரிச் சலுகை பெற்றுக்கொள்ளலாம்.