இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டில் கொரோனா பாதிப்பின் போது எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, ஐடிபிஐ ஆகிய வங்கிகள் சீனியர் சிட்டிசன் சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டங்களில் சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதல் வருமானம் கிடைத்தது. பெரும்பாலும் பிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். இதற்காகவே அவர்களுக்கு அனைத்து வங்கிகளும் கூடுதல் வட்டி விகிதம் வழங்குகிறது. இருப்பினும் இந்த சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டங்களில் சீனியர் சிட்டிசன்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட கூடுதல் வட்டியுடன் சேர்த்து இன்னும் கூடுதல் வட்டி வழங்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் இந்த சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டங்கள் தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே ஐசிஐசிஐ வங்கி தனது சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டத்தை அக்டோபர் 7 ஆம் தேதி வரை நீடித்துள்ளது.
அதனைப் போல எஸ்பிஐ வாங்கி 2023 மார்ச் வரை சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டத்தை நீடித்துள்ளது. ஆனால் எச்டிஎஃப்சி, ஐடிபிஐ ஆகிய இரு வங்கிகளும் சீனியர் சிட்டிசன் சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டங்களை இன்னும் நீடிக்க வில்லை. எனவே வருகின்ற செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் எச்டிஎஃப்சி, ஐடிபிஐ வங்கிகளில் சீனியர் சிட்டிசன் சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டங்கள் முடிவுக்கு வருகிறது. இதனையடுத்து எச்டிஎஃப்சி மற்றும் ஐடிபிஐ வங்கிகள் சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டத்தில் கூடுதலாக 0.75% வட்டி வழங்கி வருகிறது. எனவே இந்த இரு வங்கிகளின் சீனியர் சிட்டிசன் சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டங்களிலும் கணக்கு தொடங்கி பயன்பெற விரும்புவோர் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் கணக்கை தொடங்கிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவே கடைசி வாய்ப்பு.