சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக வருமானம் கிடைக்கும் சூப்பரான திட்டத்தை பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.
சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக வட்டி வழங்கும் திட்டம் குறைந்துகொண்டே வருகிறது. சீனியர் சிட்டிசன் காலம் காலமாக முதலீடு செய்து வந்த பிக்சட் டெபாசிட் திட்டங்களில் தற்போது அதிக வட்டி வழங்குவதில்லை. இதனால் சீனியர் சிட்டிசன்களுக்காகவே புதிய திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வயது முதியவர்கள் என்பதால் சீனியர் சிட்டிசன்கள் பங்கு சந்தை போன்ற ரிஸ்க்கான முதலீடுகளில் பணத்தை போடுவது இல்லை. மாறாக பிக்சட் டெபாசிட், சேமிப்பு திட்டங்கள் போன்றவற்றில் பணத்தை முதலீடு செய்து அதன் வட்டி வாயிலாக வருமானம் சம்பாதிக்கிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு வங்கிகள் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இதனால் சீனியர் சிட்டிசன்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சீனியர் சிட்டிசன்கள் பலன் பெற வேண்டும் என்பதற்காக’ சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 60 வயதை தாண்டியவர்கள் இதில் முதலீடு செய்துகொள்ளலாம். இதில் சேமிப்பு கணக்கு தொடங்க குறைந்தபட்ச தொகை 1,000 ரூபாய் ஆகும். அதிகபட்சமாக 15 லட்சம் வரை டெபாசிட் செய்து கொள்ளலாம்.
தற்போது இந்த சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டத்தில் 7.4 சதவீதம் வட்டி வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31, ஜூன் 30, செப்டம்பர் 30, டிசம்பர் 30 ஆகிய தேதிகளில் வட்டி தொகை செலுத்தப்படும். இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு வருமான வரி சட்டம் கீழ் சலுகை உண்டு. இந்த திட்டத்தின் மெச்சூரிட்டி காலம் 5 ஆண்டுகள், தேவைப்பட்டால் அதற்கு மேல் மூன்று ஆண்டுகள் நம்மால் நீடித்துக் கொள்ள முடியும்.