மத்திய அரசின் அருமையான பென்ஷன் திட்டம் குறித்து பார்க்கலாம்.
கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் சுமார் 7 கோடி மக்கள் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. இந்த பிரதான் மந்திரி தன் ஜன் யோஜனா திட்டத்தில் மருத்துவ காப்பீடு, ஓய்வூதியம், மத்திய, மாநில அரசு நிதி உதவிகள் போன்றவைகள் வழங்கப்படுகிறது. இந்த நிதி உதவிகள் அனைத்தும் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இந்தத் திட்டத்தில் சேமிப்பு கணக்கு தொடங்குபவர்களுக்கு 60 வயதை தாண்டிய பிறகு மாதம்தோறும் ரூபாய் 3000 பென்ஷன் கிடைக்கும். இந்தத் திட்டத்தின் பயனாளர் இறந்து விட்டால் அவரது மனைவிக்கு பென்சன் தொகையில் பாதி அளவு குடும்ப நிதியாக வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தை தொடங்கும் போது உங்களுக்கு 18 வயது இருந்தால் மாதம் ரூபாய் 55 செலுத்தினால் போதும். ஆனால் ஒருவேளை திட்டத்தை தொடங்கும் போது உங்களுக்கு வயது 40 ஆக இருந்தால் மாதந்தோறும் ரூபாய் 200 செலுத்த வேண்டும். இந்தத் திட்டத்தில் நீங்கள் இணையும் வயதைப் பொறுத்து பணம் செலுத்த வேண்டும். இந்தத் திட்டத்தில் இணைபவர்களுக்கு விபத்து காப்பீடாக ரூபாய் 1 லட்சம் வழங்கப்படும். இந்தச் சலுகை கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்கு பிறகு கணக்கு தொடங்கியவர்களுக்கு கிடைக்கும்.
இதில் பொது நிதியாக ரூபாய் 30,000 மற்றும் 1.3 லட்சம் ரூபாய் பெறுவதற்கான நிபந்தனைகளும் உள்ளது. நீங்கள் பிரதான் தன் யோஜனா திட்டத்தில் இணையும்போது சேமிப்பு கணக்குடன் உங்கள் ஆதார் கார்டையும் இணைக்க வேண்டும். இதன் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் உங்களுடைய சேமிப்பு கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் ஓவர் டிராஃப்ட் முறையில் ரூபாய் 10,000 வரை பணம் எடுத்துக்கொள்ளலாம். இந்த வசதியைப் பெறுவதற்கு நீங்கள் முதல் 6 மாதத்திற்கு குறைந்தபட்ச இருப்பு தொகையை சேமிப்பு கணக்கில் வைத்திருக்க வேண்டும். மேலும் இதற்கு டெபிட் கார்டு வாங்கப்பட்டு அடிக்கடி பண பரிவர்த்தனையும் செய்திருக்க வேண்டும்.