Categories
தேசிய செய்திகள் பல்சுவை

சீனியர் சிட்டிசன்களே….! உங்களுக்கு நல்ல காலம் போறந்துருச்சு…. வெளியான மகிழ்ச்சி செய்தி….!!!!

ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு சீனியர் சிட்டிசன் உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 4 தினங்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ரெப்போ வட்டி விகிதம் 0.40 சதவீதம் அதிகரித்து 4.40 சதவீதமாக உயர்த்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பணவீக்கத்தின் அழுத்தம் அதிகரித்த நிலையில் இப்படி ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். கடந்த இரண்டு ஆண்டுகளாக ரெப்போ வட்டி விகிதம் தொடர்ந்து மாறாமல் இருந்து வந்த நிலையில் தற்போது திடீரென உயர்த்தப்பட்டது. இதனால் வங்கிகளில் கடன் வாங்கியவருக்கு இஎம்ஐ செலவு உயரும்.

வீட்டு கடன், வாகனங்களின் கடன், தனிநபர் கடன் போன்றவற்றை வாங்கியவர்களுக்கு அதிக இஎம்ஐ கட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகும். இருப்பினும் இந்த வட்டி விகிதம் உயர்வு காரணமாக பிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்வோர் பயன்பெறுவார்கள். அதாவது ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயரும். 2020 ஆம் ஆண்டு மே மாதம் ரெப்போ வட்டி குறைக்கப்பட்ட போது பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டியும் குறைக்கப்பட்டது. இதனால் சீனியர் சிட்டிசன்கள் பலரும் பாதிக்கப்பட்டனர்.

தற்போது இந்த வட்டி விகிதம் சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக லாபத்தை தரும். அதாவது அவர்கள் பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்தால் வட்டி விகிதம் அதிகரிக்கும். இதனால் சீனியர் சிட்டிசன் பிக்சட் டெபாசிட் திட்டங்களில் அதிக அளவில் முதலீடு செய்வார்கள். மேலும் முன்பைவிட அவர்களுக்கு அதிக பலனும் கிடைக்கும்.

Categories

Tech |