Categories
பல்சுவை

சீனியர் சிட்டிசன்கள் அதிகமா சம்பாதிக்க?…. Airtel Payments Bank போட்ட பிளான்…..!!!!!

Airtel Payments வங்கியானது நல்ல ஒரு வட்டியுடன் கூடிய பிக்சட்டெபாசிட் திட்டத்தினை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதற்காக இண்டஸ் இண்ட் வங்கியுடன் (IndusInd Bank) ஏர்டெல் பேமண்ட்ஸ் வங்கி கூட்டணி அமைத்து உள்ளது. Airtel Payments வங்கி தன் பிக்சட்டெபாசிட் வாடிக்கையாளர்களுக்கு நல்ல வட்டி விகிதத்தையும் வழங்குகிறது. இதனிடையில் Airtel Payments வங்கி பொது வாடிக்கையாளர்களுக்கு 6.5 சதவீதம் வரையிலும் வட்டி வழங்குகிறது. சீனியர் சிட்டிசன்களுக்கு எக்ஸ்ட்ரா 0.5 சதவீதம் வட்டி கிடைக்கிறது.

அதுமட்டுமல்லாமல் ஒரே டெபாசிட் காலத்திற்கு பல டெபாசிட்டுகளை போடலாம். அதன்படி 1 வருடம், 2 ஆண்டு, 3 ஆண்டு போன்ற காலங்களுக்கு வேறுவேறு தொகையை அல்லது வேறுவேறு டெபாசிட்டாக முதலீடு செய்யலாம். இதுதவிர மெச்சூரிக்கு முன்னதாகவே டெபாசிட்டை கலைத்துவிட்டு பணத்தை எடுக்கலாம். இதில் மெச்சூரிட்டிக்கு முன்னதாக பணத்தை எடுக்க எந்தவொரு அபராதமோ, பிராசஸிங் கட்டணமோ வசூலிக்கப்படாது. ஒருசில நிமிடங்களிலேயே டெபாசிட் பணமானது நேரடிமுறையில் வங்கிக் கணக்குக்கு செலுத்தப்பட்டு விடும் என்று அதன் வங்கி வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பிக்சட்டெபாசிட் திட்டங்கள் ரிஸ்க்யின்றி பாதுகாப்பாக முதலீடு செய்ய விரும்புவோரின் சரணாலயமாக இருக்கிறது. ஏனென்றால் பிக்சட்டெபாசிட்டில் வட்டி வருமானம் கிடைக்கும், நீங்கள் போட்ட பணமும் அப்படியே இருக்கும். அத்துடன் சீனியர் சிட்டிசன்கள் பெரும்பாலும் பிக்சட்டெபாசிட்டில் முதலீடு செய்கின்றனர். Airtel Payments வங்கி டிஜிட்டலில் மட்டுமின்றி நாடு முழுதும் 5 லட்சம் வங்கிசேவை மையங்களை கொண்டுள்ளது. இதுதவிர இண்டஸ் இண்ட் வங்கிக்கு நாடு முழுவதும் 2103 கிளைகள் உள்ளன.

Categories

Tech |