சீனியர் வீரர்கள் இலங்கை தொடரில் பங்கேற்க முடியாமல் விலகி இருப்பதை குறித்து ரோஹித் சர்மா தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
பிப்ரவரி 24 முதல் முதல் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இலங்கை அணி பங்கேற்க உள்ளது. இந்த போட்டிகள் 24, 26, 27 ஆகிய நாட்களில் லக்னோ தர்மசாலா மைதானங்களில் வைத்து நடைபெறும் நிலையில், இந்திய அணியில் இருந்து விராட் கோலி, ரிஷப் பந்த் ஆகியோர் விலகி ஓய்வுக்கு சென்றுள்ளனர். கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர்.
டி20 தொடரில் கடைசி நேர மாற்றம் குறித்து ரோஹித் சர்மா தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். அதிலும் சீனியர் வீரர்கள் காயம் காரணமாக விலகுவது கவலைக்குரியதாகும், மற்றும் காயத்தின் விளைவுகள் பின்னாளில் மிகவும் சிரமத்தை ஏற்படுத்தும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், தனக்கும் இப்படி காயத்தால் பாதிப்படைந்த அனுபவம் இருக்கிறது. எனவே சீனியர் வீரர்கள் காயங்களால் பாதிக்கப்படக்கூடாது என்பதே எனது ஆவல். இந்நிலையில் இளம் வீரர்களின் ஆட்டம் சிறப்பாக உள்ளதால், அவர்களை வைத்து சிறப்பான முறையில் செய்து விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என கூறியுள்ளார்.
இலங்கைக்கு எதிராக இந்திய உத்தேச அணி வீரர்களின் பட்டியல், ரோஹித் ஷர்மா, ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஷ்ரேஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷல் படேல், ஜஸ்பரீத் பும்ரா, முகமது சிராஜ், ரவி பிஷ்னோய். இறுதியாக டி20 தொடரில் இருந்து முக்கிய வீரர்கள் விலகியுள்ளதால் இளம் பேட்டிங் வரிசை உடன் இந்திய அணி, களம் இறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.