Categories
சினிமா தமிழ் சினிமா

சீனு ராமசாமி- ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படம்… பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு…!!!

சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் கூடல்நகர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சீனுராமசாமி. இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பின் இவர் இயக்கத்தில் வெளியான தர்மதுரை, நீர்ப்பறவை, கண்ணே கலைமானே ஆகிய படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள இடம் பொருள் ஏவல், மாமனிதன் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

தற்போது சீனு ராமசாமி நடிகர் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் பிரபல நடிகை காயத்ரி கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |