சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் லுக் நாளை வெளியாகவுள்ளது .
தமிழ் திரையுலகில் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான கூடல்நகர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சீனுராமசாமி. இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பின் இவர் இயக்கத்தில் வெளியான தர்மதுரை, நீர்ப்பறவை, கண்ணே கலைமானே ஆகிய படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமனிதன் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
. @kalaimagan20 ’s @SkymanFilms production NO 2@seenuramasamy @gvprakash project title look will be revealed tomorrow.
#SkyManFilmsPN2@DoneChannel1 @CtcMediaboy pic.twitter.com/QeW3LSd6OA
— SKYMAN FILMS INTERNATIONAL (@SkymanFilms) August 10, 2021
தற்போது சீனு ராமசாமி நடிகர் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். ஸ்கை மேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் காயத்ரி கதாநாயகியாக நடிக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் லுக் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.