பாகிஸ்தான் சீன அரசிடம் இருந்து 2.3 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் வாங்கி இருக்கிறது.
பாகிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. குறைந்து வரும் அந்நிய செலவாணி கையிருப்பு, அதிகரித்துவரும் திருப்பி செலுத்த வேண்டிய கடன் தொகை, டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற பல சிக்கல்களை அந்த நாடு எதிர்கொண்டு வருகிறது.
இந்த சூழலில் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து உள்ள பாகிஸ்தான் சீனாவிடமிருந்து 2.3 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் வாங்கி இருக்கிறது. இது பற்றி பாகிஸ்தான் நிதி மந்திரி இஸ்மாயில் தனது ட்விட்டர் பக்கத்தில் சீன வங்கிகள் கூட்டமைப்பு இன்று பாகிஸ்தானுக்கு 2.3 பில்லியன் டாலர் கடன் வழங்க ஒப்புக் கொண்டு கடன் பத்திரத்தில் கையெழுத்திட்டு இருக்கிறது. மேலும் இன்னும் இரண்டு நாட்களில் இந்த பணம் பாகிஸ்தான் வந்து சேரும் இதற்காக சீன அரசிற்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என பதிவிட்டிருக்கிறார்.