சீனாவின் புதிய கடல்துறை சட்டம் ஜப்பான் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் கொண்டுவரப்பட்ட புதிய கடல் துறைக்கான சட்டம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடைமுறைக்கு வந்துள்ளது. இச்சட்டம் ஜப்பான் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளை அதிருப்தி அடைய செய்துள்ளது. அதாவது இச்சட்டத்தின் படி, வெளிநாட்டின் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்படும். மேலும் இதற்காக கடலோர காவல்படையினர் எந்த வகையிலான நடவடிக்கையையும் மேற்கொள்ளலாம். இதில் ஆயுதங்களும் உபயோகப்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜப்பான் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் கடல் பயணம் செய்வதற்கு மற்றும் தென் சீன கடலுக்கு மேற்பட்ட பகுதியில் பறத்தல் போன்ற சுதந்திரங்களுக்கு இச்சட்டம் தடை விதிப்பதாக தெரிவித்துள்ளன. மேலும் இந்த குறிப்பிட்ட இரண்டு நாடுகள் இதுதொடர்பான கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றன. அதில் பரபரப்பை உண்டாக்கும் எந்த வகையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டாம் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு உரிய தீவுகள் கிழக்கு சீன கடல்பகுதியில் அமைந்துள்ளது. இதனால் சீனாவின் இந்த நடவடிக்கைகளுக்கு ஜப்பான் வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும் பிராந்தியத்தின் கடல் பகுதிகளை சொந்தம் கொண்டாடி வரும் சீனா இந்த நடவடிக்கையை மேற்கொண்டதற்கு முக்கிய காரணமாக நாட்டின் கடலோர காவல்படை கப்பல்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.