Categories
உலகசெய்திகள்

சீன கம்யூனிஸ்ட் கட்சி தேசிய மாநாடு… மூன்றாவது முறையாக சீன அதிபராக ஜின்பிங்…!!!!

சீன அதிபராக கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்  ஜின்பிங் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சீன அதிபராக கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்  ஜின்பிங் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு 5 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுகின்றார் அவரே அதிபராக இருப்பார். இந்த நிலையில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு கடந்த 16ஆம் தேதி தலைநகர் பிஜிங்கில் தொடங்கியுள்ளது.

ஒரு வார கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில் மீண்டும் ஜின்பிங் மூன்றாவது முறையாக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் இதன் மூலமாக ஜின்பிங் மூன்றாவது முறையாக அதிபராக தேர்வாகின்றார். மேலும் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜின்பிங் கட்சி பொதுச் செயலாளராகவும் அதிபராகவும் மேலும் ஐந்து வருடங்கள் நீட்டிப்பார் சீன கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய மாவோவுக்கு பின் அதிக காலம் அதிபராக இருப்பவர் என்று பெருமையை ஜின்பிங் பெறுகின்றார்.

Categories

Tech |