சீனாவில் பெட்ரோல் டேங்கர் கப்பல், சரக்குக் கப்பலுடன் மோதியதால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
யாங்ட்சே நதி முகத்துவாரத்தின் அருகில் நேற்று அதிகாலை சீனாவில் 3,000 டன் பெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்கர் கப்பல், மணல் மற்றும் ஜல்லி ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு வந்த சரக்குக் கப்பலுடன் மோதியதால் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர், தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மேலும் தீப்பற்றிய கப்பலில் பயணம் செய்த 3 மாலுமிகள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். மீதமிருந்த 11 மாலுமிகளின் நிலைமை என்னவென்று தற்போது வரை தெரியவில்லை. மாயம் ஆகிய மாலுமிகளை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.