சீன செயலிகளின் தடைக்கு பின் டிக்டாக் நிறுவனத்திற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் எல்லையில் சீன ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலால் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்திய மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. எனவே இந்தியர்கள் இனி சீனப் பொருட்களை வாங்க மாட்டோம் பயன்படுத்த மாட்டோம் என்று கூறி சீன பொருட்களுக்கு தடை விதிக்கக் கோரி மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதேபோல் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த அமைப்பினரும் இந்தியாவில் 59 செயலிகள் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் விதமாக இருப்பதாக கூறி மத்திய அரசிடம் லிஸ்ட் ஒன்றை தயார் செய்து கொடுத்தது. அதன்படி 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டது. இதனால் மிக அதிக அளவில் இந்தியாவின் பயனாளர்களைக் கொண்டு செயல்பட்டு வந்த ஹலோ டிக் டாக் உள்ளிட்ட செயலிகளின் நிறுவனத்திற்கு பெரும் இழப்பு என்பது ஏற்பட்டு உள்ளது.
அந்த வகையில், டிக்டாக் நிறுவனத்திற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டதால் ரூபாய் 45 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 20 கோடிக்கும் அதிகமான பயன்பாட்டாளர்களை இந்தியாவில் கொண்ட டிக் டாக் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இழப்பு என்பது சீன முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் மத்தியில் மிகப்பெரிய பாதிப்பை தற்போது ஏற்படுத்தியுள்ளது.