Categories
உலக செய்திகள்

சீன தொழிலாளர்கள் கொல்லப்பட்ட வழக்கில்…. 6 பேருக்கு மரண தண்டனை…. அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்….!!!!

காங்கோ நாடு ஒரு ஜனநாயக குடியரசாக உள்ளது. இந்த நாட்டில் கடந்த மார்ச் மாதம் இரண்டு சீன சுரங்க தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் இரண்டு ராணுவ கர்னல்கள் உட்பட ஆறு பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். மேலும் நான்கு ராணுவ வீரர்களுக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தும் தீர்ப்பளிக்கப்பட்டது. குறிப்பாக மரண தண்டனை பெற்ற ஆறு பேரில் ஒருவரை தவிர மற்ற அனைவரும் இராணுவத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

மேலே குறிப்பிட்ட இரண்டு ராணுவ கர்னல்களும் சுரங்கத்திலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த தொழிலாளிகளிடமிருந்து நான்கு தங்க கட்டிகள் மற்றும் 6000 டாலர் மதிப்புள்ள ரொக்கம் ஆகியவற்றை திருடும் நோக்கத்தோடு கண்வாய் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இந்த தண்டனையானது ராணுவத்தில் உள்ள கருப்பு ஆடுகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என ராணுவ நடவடிக்கைகளின் செய்தி தொடர்பாளர் லெப்டினன்ட் ஜுல்ஸ் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து பாதுகாப்பு குழு மேல்முறையீடு செய்யப் போவதாகவும் அறிவித்துள்ளது.

Categories

Tech |