சீனாவில் உருமாறிய கொரோனா வைரஸ் பிஎஃப் 7 தீவிரமடைந்து வருகிறது. இந்த கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கு பல்வேறு நாடுகளும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. அந்த வகையில் சீனாவில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு நடவடிக்கைகளை விதிப்பது பற்றி பரிசீலனை செய்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து அரசும் இந்த நடவடிக்கை குறித்து பரிசீலனை செய்து வருகிறது. இதன்படி சீனாவில் இருந்து வரும் பயணிகள் கொரோனா நெகடிவ் சான்றிதழை கொண்டு வர வேண்டும்.
இதற்காக சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்காக இங்கிலாந்து அரசு புதிய கொள்கையை அறிவிக்க தயாராக இருக்கிறது. இருப்பினும் அது பற்றிய குறிப்பிட்ட கால அளவு எதையும் வெளியிடவில்லை. நேற்று முதல் ஜப்பானில் சீன பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்ற நடைமுறை அமலாகியுள்ளது. அதனை தொடர்ந்து இந்தியா போன்ற நாடுகள் சீன பயணிகளிடம் புதிய கொரோனா விதிகளை கடைபிடிப்பது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்த பரிசீலனையில் அமெரிக்காவும் ஈடுபட்டுள்ளது. அதேபோல் இங்கிலாந்து அரசும் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா சான்றிதழை கட்டாயமாக முடிவு செய்து அதற்கான பரிசீலனை மேற்கொண்டு வருகிறது.