சீனாவின் மேற்குப் பிராந்தியத்தில் குறிப்பாக ஜின்ஜியாங்கில் வசிக்கும் சிறுபான்மையினரான முஸ்லிம்கள் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதில் குறிப்பாக உய்குர் முஸ்லிம்கள் மீது சீனா அடக்குமுறை, மத துஷ்பிரயோகம் செய்வதாக அமெரிக்கா தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகிறது.
இந்தநிலையில் இந்த மக்களை வலுக்கட்டாயமாக ஊழியர்களாக பயன்படுத்தி இந்த மாகாணத்தில் உற்பத்தியாகும் பொருட்களை அமெரிக்காவில் இறக்குமதி செய்வதற்கு தடைவிதிக்கும் புதிய சட்டம் அமெரிக்க செனட் சபையில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்திற்கு சீனா கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. மேலும் இதற்கு தக்க பாடம் புகட்டுவோம் என்றும் சீனா அறிவித்துள்ளது.