Categories
உலக செய்திகள்

சீன ரயில் பெட்டிகள் வேண்டாம்… ஓட்டுநர்கள் எதிர்ப்பு… மக்களுக்கு பாதுகாப்பு இல்லை…!!

சீனா தயாரித்த ரயில் என்ஜின்களை இலங்கையில் இயக்க ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இலங்கை சேவையில் பயன்படுத்தப்படும் ரயில் பெட்டிகள் உள்ள ரயில் இயந்திரங்கள் சில சீனாவால் உருவாக்கப்பட்டவை ஆகும். இந்நிலையில் இதனை இலங்கையில் இயக்க ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதுகுறித்து லோகோ மோட்டிவ் இயந்திர செயல்பாட்டாளர் சங்கத்தின் செயலாளரான இந்திக தொடங்கொட என்பவர் இந்த எதிர்ப்பு தொடர்பான தீர்வு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் ரயில் இயந்திரங்களின் பிரேக்கை  அழுத்துகையில் சீனா தயாரித்த ரயில் பெட்டிகள் சில தொலைவு சென்ற பின்பே நிறுத்தப்படுகிறது என்றும், இது மக்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிப்பதாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதற்கு முன்பு கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் இதுகுறித்த முறையீட்டில் அப்போதிருந்த அமைச்சரான காமினி லொக்குகே இது குறித்த ஒரு அறிக்கையை கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |