சீனா அனுப்பிய தியான்வென்-1 ரோவர் என்ற விண்கலம் செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களை பூமிக்கு அனுப்பியுள்ளது.
சீனா கடந்த வருடம் ஜூலை மாதத்தில் தியான்வென்-1 ரோவர் என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய அனுப்பியிருந்தது. சுமார் 240 கிலோ எடை உடைய, இந்த விண்கலமானது, செவ்வாய் கிரகத்தில் கடந்த 15ஆம் தேதியன்று வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.
மேலும் செவ்வாய் கிரகத்தின் மேல் பகுதி மற்றும் கீழ் பகுதி பற்றிய ஆய்வை மேற்கொண்டிருக்கிறது. இந்த விண்கலத்தில் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது. அதில் செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களை எடுத்து, பூமிக்கு அனுப்பியிருக்கிறது. அந்த புகைப்படங்கள் சீன விண்வெளி மையத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது.