உலகில் முன்னணியில் உள்ள பொருளாதாரத்தின் பெரும் சக்திவாய்ந்தவையான ஜி-7 நாடுகள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறவுள்ளது.
உலகில் முன்னணியில் உள்ள பொருளாதாரத்தின் பெரும் சக்திவாய்ந்தவையான ஜி-7 நாடுகள் கலந்து கொள்ளும் கூட்டமானது வரும் 19ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பிரான்ஸ், ஜெர்மனி அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம், கனடா, இத்தாலி போன்ற நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளார்கள்.
தற்போது இக்கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கும் அமெரிக்க அதிபர் ஜோபைடன் மீது அனைவரின் கவனமும் உள்ளது. அதாவது அதிபராக பதவியேற்ற பின்பு ஜோபைடன் கலந்துகொள்ள இருக்கும் முதல் சர்வதேச கூட்டம் இது எனவே உலக நாடுகளின் தலைவர்களின் கவனம் இவர் மீது திரும்பியிருக்கிறது.
மேலும் கொரோனா தொற்றின் தீவிரம், சர்வதேச அரசியலில் இதற்கான தாக்கம் போன்ற அடிப்படையிலும், சர்வதேச அரங்கில் சீனாவின் எழுச்சி என்ற நோக்கிலும் இந்த கூட்டத்தில் அவர் பேசுவார் என்று அதிபர் வெள்ளை மாளிகையில் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. மேலும் கொரோனா காரணமாக இந்த முறை உலக நாடுகளின் தலைவர்கள் கூட்டம் மெய்நிகர் மூலமாக நடைபெற இருக்கிறது.