Categories
மாநில செய்திகள்

சீப்பை ஒழிச்சு வச்சா கல்யாணம் நின்றுவிடும்னு நீங்க நினைக்காதீங்க!… பொங்கி எழுந்த அமைச்சர் ஜெயக்குமார்….!!!!

அ.தி.மு.க முன்னாள் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் தளவாய் சுந்தரம் போன்றோர் சென்னை அடையாரிலுள்ள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் இல்லத்தில் நடந்து கொண்டிருக்கும் லஞ்சஒழிப்புத்துறை சோதனையை பார்வையிட்டனர். இதையடுத்து அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது “விடியாத அரசு தவறாமல் செய்யும் ஒரேவேலை ரெய்டு. அதிலும் குறிப்பாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களின் செயலை முடிக்க வேண்டும் என செயல்படுகிறது.

நாட்டில் பல்வேறு பிரச்சனை இருக்கிறது. ஆன்லைன் ரம்மி, கொலை, கொள்ளை, அடிப்படை கட்டமைப்பு பிரச்சனை என சிங்கார சென்னையை சீர் கேடான சென்னையாக மாற்றி வருகின்றனர். மேலும் மடிக் கணினி வழங்கவில்லை, தாலிக்கு தங்கம் திட்டத்தை ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிட்டனர். அத்துடன் பேருந்து கட்டணம், பால் கட்டணம், சொத்துவரி, மின்கட்டணம் என பல்வேறு கட்டண உயர்வு பிரச்சனையை பேசவிடாமல் திசை திருப்புவதற்காகவே இந்த சோதனை. இதனிடையில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டால் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

இதனை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி போராட்டம் அறிவித்தார். எப்போதெல்லாம் அ.தி.மு.க போராட்டம் அறிவிக்கிறதோ, அப்போதெல்லாம் தி.மு.க அரசு இப்படி ரைடு விடுகிறது. சீப்பை ஒழிச்சு வச்சா கல்யாணம் நடைபெறாது என அவர்கள் எண்ணக்கூடாது. இன்றைக்கு எசமான் ஸ்டாலின்தான். அவர் கூறுவதுதான் காவல்துறை கேட்டு இப்படி ரைடு விடுகிறார்கள். மேலும் அமைச்சர் மூர்த்தி வீட்டு திருமணம் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் வீட்டு திருமணம் போன்று நடைபெற்றது. ஆகவே எவ்வளவு செல்வம் இவர்கள் வைத்திருப்பார்கள். விஜய பாஸ்கர் மீது போடப்பட்ட வழக்கில், அவருக்கு எந்தபங்கும் கிடையாது. இதற்கு essential certificate வழங்குவதுதான் மாநில அரசின் வேலை ஆகும். இறுதி கையெழுத்து இந்திய அரசாங்கம்தான் வழங்க வேண்டும்” என அவர் கூறினார்.

Categories

Tech |