Categories
அரசியல்

சீமானின் கட்சி…. ஒரு பிரின்ஸ் அவுட்-புட் கட்சி…. சாடிய கார்த்தி சிதம்பரம்…!!!

பொள்ளாச்சியில் நடந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பங்கேற்றார். இதன் பின்னர் அவர்  செய்தியாளர்களுடன் கலந்துரையாடினார். அப்பொழுது செய்தியாளர் ஒருவர் சீமான் குறித்து கேள்வியெழுப்பியதற்கு பதிலளித்த கார்த்திக் சிதம்பரம், “சீமான் எந்தவித  கொள்கைப் பிடிப்பும் இல்லாதவர். மேலும் பிற கட்சிகளை குறித்தும், கட்சித் தலைவர்கள் குறித்தும் அவதூறாக பேசுவதை தனது வாடிக்கையாக கொண்டுள்ளார். இவர் அரசியல் ரீதியாக கூறும் விமர்சனங்களை நாங்கள் மனதார ஏற்றுக் கொள்கிறோம்.

ஆனால் அவர் காங்கிரஸ் கட்சித் தலைவர்களை குறித்து அவதூறாக கூறுவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு பேசி தன்னுடைய தரத்தை அவரே குறைத்துக் கொள்கிறார். மேலும் அவர் இளைஞர்களின் கோபத்தை தூண்டி விட்டு அதில் தனக்கு லாபம் சம்பாதித்து சொற்ப வாக்குகளை பெற்று வருகிறார். மேலும் இவரின் உண்மையான தண்டனை என்பது வரும் காலங்களில் நடக்கும் தேர்தல்களில் அவருக்கு கிடைக்கும் சொற்ப வாக்குகள் கூட கிடைக்காது. இதைத் தவிர சீமான் மக்களுக்கு  நலத் திட்டங்களை வகுத்து அரசியல் நடத்துபவர் கிடையாது. இக்கட்சியானது ஒரு பிரின்ஸ் அவுட்புட் கட்சியாகும்” என்று பதிலளித்தார்.

Categories

Tech |