நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கே டி ராகவன் வீடியோ குறித்து ஒரு கருத்து தெரிவித்திருந்தார். உலகத்தில் நடக்காத ஒன்றை கே டி ராகவன் செய்துவிட்டார். ஒருவரின் அனுமதி இல்லாமல் அவரை படம்பிடிப்பது குற்றமென அவர் பேசியது சர்ச்சையானது. இந்நிலையில் அவரின் கருத்துக்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “சீமான் பாஜகவின் பி டீம் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியிருக்கிறார். எப்படி இருந்தாலும் சீமானின் இந்த செயல் வெட்கக்கேடானது.
சீமான் ஒரு அரசியல் கட்சித் தலைவர். இவர் இப்படி பொறுப்பில்லாமல் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை, சுரண்டலை ஆதரிப்பது அதிர்ச்சியளிக்கிறது. பாஜகவிடமிருந்து மட்டுமல்ல, இப்படிப்பட்ட ஆபாசமான, அருவருக்கத்தக்க, ஆபத்தான செயல்பாடுகளை ஆதரிக்கும் சீமான் போன்றவர்களிடமிருந்து கூட பெண்களும், தமிழ் சமூகமும் விழிப்புடன் இருக்க வேண்டும். சீமான் மீது கடந்த காலத்தில் இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. தனது குற்றங்களை மறைக்கவே ராகவனின் பாலியல் குற்றத்தை வெளிப்படையாக ஆதரிக்கிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது” என்று அவர் கூறியுள்ளார்.