பாஜகவின் செயற்குழு உறுப்பினர் பதவியை, கட்சி தாவலுக்கு பெயர்போன நடிகர் ராதாரவி வகித்து வந்தார். இருந்தபோதும் இவரை கட்சியின் எந்த கூட்டங்களிலும் காண இயலவில்லை. இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றிற்கு ராதாரவி பேட்டியளித்தபோது, “பொன்.ராதாகிருஷ்ணன் தான் என்னை கட்சியில் சேர்த்து விட்டார். மேலும் அவரை கண்டால் ‘என்னை ஏன் கட்சியில் சேர்த்து விட்டீர்கள்?’ என்று அவரிடம் கேட்கவேண்டும். எவ்விஷயத்திற்கும் என்னை ஒரு பொருட்டாக எண்ணவில்லை. எனவே வெறுமனே என்னை அமர்த்தி இருக்கிறார்கள். என்றாவது ஒரு நாள் அழைப்பார்கள் என்று காத்து இருக்கிறேன்.
பாஜக அரசு பிரதமர் மோடி தலைமையில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சானது என்னை ஈர்த்த ஒன்றாகும்.தமிழன் தான் தமிழகத்தை ஆள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்”என்று கூறினார். எனவே சமூக வலைதளங்களில் நாம் தமிழர் கட்சி ராதாரவியின் அடுத்த குறியாக இருக்குமோ என்று விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.