சீமானை உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் கலவரத்தை தூண்டும் விதமாக நாம் தமிழர் இயக்கம் என்று ஒரு கட்சி இருக்கிறது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து திருநெல்வேலியில் போராட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கரபாண்டியன், திருநெல்வேலியில் இருந்து 1000 காங்கிரஸ் தொண்டர்கள் அவர் வீட்டை முற்றுகையிடுவோம். தமிழகம் மிகவும் அமைதியாக சென்று கொண்டிருக்கிறது. தமிழக முதல்வர் ஸ்டாலினின் ஆட்சி அனைத்து மக்களுக்காகவும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் விதமாக நாம் தமிழர் இயக்கம் என்று ஒரு கட்சியை நடத்திக் கொண்டிருக்கும் சீமான் அன்னை சோனியா காந்தி அவர்களையும், காங்கிரஸ் பேரியக்க தொண்டர்களையும் மிக அவதூராக பல மேடைகளில் பேசி இருக்கிறார். இவர் பேசிய பேச்சை காங்கிரஸ் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
சீமானை உடனடியாக குண்டர் சட்டத்திலே கைது செய்ய வேண்டும். இல்லையெனில் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் பேரியக்க தொண்டர்களைத் திரட்டி காங்கிரஸ் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி அவர்கள் தலைமையில் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ் கோடி ஆதித்தனார் வழிகாட்டுதலின் பேரில் திருநெல்வேலியிலிருந்து ஆயிரம் காங்கிரஸ் தொண்டர்கள் அவர் வீட்டை முற்றுகையிடுவோம் என தெரிவித்தார்.