தமிழர் முன்னேற்ற படையின் நிறுவனர் தலைவர் கி.வீரலட்சுமி தமிழக அரசியலில் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருபவர். தமிழகத்தை தமிழன் தான் ஆள வேண்டும் என்று சொல்லிவரும் சீமானிடம் 2016 ஆம் வருடம் சட்டமன்ற தேர்தலின்போது தமிழர்கள் தமிழர்களே ஆள வேண்டும் என்று பாராளுமன்றம் முன்பு தீக்குளிக்க சீமான் தயாராக இருக்கிறாரா? என்று சவால்விட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதன் பிறகு சில மாதங்களுக்கு முன்பாக வாட்ஸ் அப்பில் சிலர் ஆபாச படங்களை அனுப்பி வருகிறார்கள். அந்த ஆபாச படங்களை அனுப்பியவர்களை உடனடியாக கைது செய்யாவிட்டால், அவர்களை நானே தேடிச் சென்று அவரது ஆணுறுப்பை அறுப்பேன் என்று கூறியிருந்தார்.
இதனையடுத்து காவல் துறையினர் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்தனர். இந்த நிலையில் நடிகை விஜயலட்சுமிக்கு நீதி கேட்டு சீமான் அலுவலகத்தின் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக வீரலட்சுமி அறிவித்திருந்தார். சீமான் மேடைப் பேச்சாளராக இருந்த காலகட்டத்தில், சீமான் தன்னுடன் குடும்பம் நடத்தியதாக பிரபல நடிகை விஜயலட்சுமி மீது புகார் கொடுத்துளார். இதற்கான ஆதாரங்களையும் அவர் காவல்நிலையத்தில் கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக நீண்டகாலமாக விஜயலட்சுமிக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே அடிக்கடி வார்த்தைப் போர் நிகழ்ந்து வருவது வழக்கம். இந்த நிலையில் நீதி கேட்டு சீமான் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக வீரலட்சுமி பதற்றத்தை ஏற்படுத்தி இருந்தார். ஆனால் வீரலட்சுமியிடம், போராட்டத்தை தனக்காக நடத்த வேண்டாம் என்று விஜயலட்சுமி கூறியதால், போராட்டத்தை கைவிட்டு விட்டதாக வீரலட்சுமி தெரிவித்துள்ளார்.