தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் சீமான். இவர் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் பன்முகங்களை கொண்டவர். இதனையடுத்து அரசியலில் அடி எடுத்து வைத்த பிறகு சினிமாவில் அதிகம் தலை காட்டாமல் இருந்து வருகிறார். இவர் அரசியலில் சூறாவளியாக சுழன்றாலும், திரைத்துறையில் நல்ல நட்பை தொடர்ந்து வருகிறார்ம் அதன்படி இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனுடன் சீமானுக்கு உள்ள நட்பு ஜேம்ஸ் பா செந்தில் சமூக வலைதள பதிவு மூலம் தெரிய வந்துள்ளது.
அதில், நேற்று சீமானுடன் தொலைபேசியில் நான் பேசினேன். அப்போது, அவர் பெருஞ்சித்திரனாரின் புத்தகத்தை அனுப்பி வைக்கிறேன் வாசித்து பாருங்கள் என்று சீமான் கூறினார். அதனை தொடர்ந்து ஒரு புத்தகம் வரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் ஒரு நூலகத்தையே அனுப்பி வைத்துள்ளார் என்று பதிவிட்டுள்ளார். மேலும் ஜேம்ஸ் வசந்த் சீமான் அனுப்பிய புத்தகக் குவியலை தனது சோசியல் மீடியாவில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.