எம்ஜிஆரை பற்றி பழித்து பேசிய சீமான் ஒரு அரைவேக்காடு என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் எம்ஜிஆரின் பிறந்தநாளன்று, அவரின் உருவப்படத்திற்கு அமைச்சர் கடம்பூர் ராஜு வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். அதோடு எம்ஜிஆர் நினைவு நாளுக்காக மொட்டை போட்டுக் கொண்ட அதிமுக தொண்டர்களுக்கு வேஸ்டிகள் மற்றும் சட்டைகளை வழங்கியுள்ளார். இதயடுத்து அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அதில், “எம்ஜிஆரை தமிழக மக்கள் ஒரு தெய்வமாக வணங்குகிறார்கள்.
அவரை பழித்து பேசுவதை ஒருபோதும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் எம்ஜிஆரை பற்றி பேச சீமானுக்கு எந்த அருகதையும் கிடையாது. அவரைப் போன்ற அரைவேக்காடுகள் தான் வாய்க்கு வந்தபடி எது வேண்டுமானாலும் பேசுவார்கள். பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை படித்தாரா? என்றே தெரியவில்லை. எல்லா மக்களுக்கும் தெரிந்திருக்கும் விஷயம் கூட அவருக்கு தெரியாது. மேலும் சொத்து குறித்து வெள்ளை அறிக்கை விட நான் தயாராக இருக்கிறேன். வெள்ளை அறிக்கை விட கமல் தயாராக இருக்கிறாரா?” என்று பேசியுள்ளார்.