Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சீமான் போட்டியிடும் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

வரக்கூடிய தமிழக சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் பெயர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்றும், அது குறித்தான வேட்பாளர் பட்டியலில் 117 பெண் வேட்பாளர்கள், 117ஆண் வேட்பாளர்கள் போட்டியிட போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடப் போவதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகம் கூட்டத்தில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்கு பசுபதி, மதுரவாயில் சட்டமன்ற தொகுதிக்கு கணேஷ்குமார்,

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு அன்பு தென்னரசு, மாதவரம் சட்டமன்ற தொகுதிக்கு ஏழுமலை, ராதாகிருஷ்ணன் சட்டமன்ற தொகுதிக்கு கௌரிசங்கர்,  வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு  ஸ்ரீதர், துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்கு முகமது கடாபி, சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு  தேசிங்கு ராஜா,  அண்ணாநகர் சட்டமன்ற தொகுதிக்கு சங்கர்,

விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு ராஜேந்திரன்,  சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு சுரேஷ்குமார், சோளிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு மைக்கேல், ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு கார்த்திகேயன்,  செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதிக்கு சஞ்சீவி நாதன், செய்யூர் சட்டமன்ற தொகுதிக்கு ராஜேஷ்  என முழு வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |