Categories
அரசியல்

சீமான் வசதியா கார்ப்பரேட் முதலாளிகளுடைய கைப்புள்ளயா இருக்கிறார்… கே. பாலகிருஷ்ணன் பேட்டி…!!!

கே பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “சீமான் வந்து தமிழ்நாட்டில், என்ன அரசியல் களத்தில் இருக்கிறார்?  என்ன நிலையான கொள்கை வைத்திருக்கிறார்?  என்ன மாற்றத்தை செய்ய நினைக்கிறார் ? ஒண்ணுமே கிடையாது இப்பொழுது  நீங்கள்  பாருங்கள்  இந்த 100 நாள் வேலை திட்டத்தில் அவர் என்ன புரிந்துகொண்டார், ஒன்றுமே இல்லை 100 நாள் வேலைத்திட்டம் ஒன்றரை கோடி மக்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கிறது.

குறிப்பாக கிராமப்புற பெண்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கிறது. ரயில்வே கொடுக்க போகிறேன், எல் ஐ சி கொடுக்க போகிறேன் என்று சொல்கிறார்கள் மற்ற எல்லாத்தையும் கொடுக்கும் பொழுது, அதுக்கெல்லாம் கோவப்படாத சீமான் இந்த 100 நாள் வேலை திட்டத்திற்கு ஏன் கோபப்படுகிறார். வராக்கடன் பத்தே முக்கால் இலட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்கிறார்கள். அவர் ஒரு வார்த்தை கூட கண்டிக்கவில்லை. ஆகவே  சீமான்  வசதியா கார்ப்பரேட் முதலாளிகளுடைய  கைப்பிள்ளை இருக்கிறார்.

மோடியினுடைய ஒடுப்பிள்ளையாக இருக்கிறார். அதாவது திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு ஓரளவு பாராட்டக்கூடிய முறையில் தான் அவர்கள் ஆட்சி அமைத்திருக்கிறது. ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் ஆட்சிக்கு வந்து இருக்கிறார்கள்.  ஒரு 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் மிக  மோசமான நிலைமை என்பது ஏற்பட்டு இருக்கிறது.  எல்லா துறையிலும் ஊழல் தலைவிரித்து ஆடி தற்பொழுது, அது ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வந்து இருக்கிறது.  எனவே இவைகளை எல்லாம்  சரி படுத்துகிற முயற்சியில் திமுக ஈடுபட்டு கொண்டு இருக்கிறது. வாய்ப்புள்ள ஒரு அளவுக்கு இன்றைக்கு  மக்களுடைய அடிப்படையான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படுகிறது.

அதில்  ஒரு அளவுக்கு நல்ல முறையில் அனைவரும் பாராட்ட கூடிய முறையில் அந்த ஆட்சி அமைந்திருக்கிறது என்பதை தான் நான் சொல்ல விரும்புகிறேன். வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் சீமானுடைய கருத்து அதாவது வந்து சீமானுக்கு நான் பதில் சொல்கின்ற மாதிரி அவரை ஒரு அரசியல் போட்டியாக நான்  நினைக்கவில்லை.  அவரும் போட்டி களத்தில் இல்லை. அதனால் அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அரசியல் ரீதியாக பார்த்தால் இன்றைக்கு அவர் யாருடன் நெருக்கமாக இருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியும். அவர் பேசுகின்ற கொள்கை, அவருடைய கோட்பாடு எல்லாமே மோடி அரசாங்கத்தினுடைய ஊதுகுழலாக அவர் இருக்கிறார்.

இடைத்தேர்தல் திமுக வெற்றி பெறும் என்று சொல்லப்படுகிறது அதை நீங்கள் எப்படி பார்க்கின்ரீர்கள்.  ஏற்கனவே அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று தெரிந்த விஷயம் தானே அது ஒன்றும் புதிய செய்திகள் இல்லை. நிச்சயமாக அது பிஜேபிக்கு அது ஒரு அடி என்றுதான் கருதுகிறேன். மேற்கு வங்கத்தில் எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டு, அநேகமாக மத்திய அமைச்சர்கள் எல்லாரும் போய் கூட பிஜேபியால் வெற்றி பெற முடியவில்லை. கேரளாவில் வெற்றி பெற முடியவில்லை.  தமிழ்நாட்டில் வெற்றி பெற முடியவில்லை. அசாமில் கூட  தப்பித்தோம் பிழைத்தோம் என்று அரைசதவீத ஓட்டு வாங்கி ஜெயித்தார்கள். அவ்வளவுதான். எனவே  நாடு முழுவதும் பிஜேபி என்பது மூழ்குகின்ற கப்பல் என்பது நாளுக்கு நாள் உறுதியாகி கொண்டே இருக்கிறது. இந்த தேர்தலிலும் அது உறுதி” என்று கூறினார்.

Categories

Tech |